பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பப்பாளி உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்த வந்த இஷாரா நாயர் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்தப் படத்தில் பானு என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தனித்துவமான குரல், தோற்றம் இருந்தும் அவருக்கு பெரிய அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பும் வெற்றிகரகமாக அமையவில்லை. தற்போது அவர் நடித்திருக்கும் படம் அதிமேதாவிகள்.
இது கல்லூரியில் சரியாக படிக்காமல் அரியர்ஸ் வைத்து விட்டு அதை கம்ப்ளீட் பண்ண போராடும் மாணவர்களின் கதை. இஷாராவும் அரியர்ஸ் வைத்து விட்டு அல்லாடும் சுஜி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தன் ஹீரோ சுரேஷ் ரவி. ஆனால் இஷாராவுக்கும், சுரேஷ் ரவிக்கும் காதல் எதுவும் இல்லை. இருவரும் சேர்ந்து அரியர்சுக்காக போராடுகிற மாதிரி கதை. சதுரங்க வேட்டைக்கு பிறகு வெளிவந்த படங்கள் கைவிட்ட நிலையில் அதிமேதாவிகளை நம்பிக் கொண்டிருக்கிறார் இஷாரா. இது பற்றி அவர் கூறியதாவது:
நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்க கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம் தான் அதி மேதாவிகள். இந்த படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன்.
மற்ற எல்லா படங்களில் இருந்தும் எங்களின் அதி மேதாவிகள் படம் தனித்து விளங்கும். காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்" என்கிறார் இஷாரா நாயர்.