Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 மொழிகளில் பிரபாஸ் நடிக்கும் சாஹூ

25 ஏப், 2017 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Prabhas-movie-next-movie-in-three-languages

வருடத்திற்கு 4 படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரபாஸ் கடந்த 4 ஆண்டுகளில் நடித்த ஒரே படம் பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகம். இன்னும் சில தினங்களில் பாகுபலி-2 வெளிவர இருக்கிறது. பாகுபலிக்காக உடல் எடையை கூட்டி அதற்கென தனி கவனம் செலுத்திய பிரபாஸ் இப்போது சகஜமாவிட்டார். இனி தன் வழக்கமான பாணியிலான கலகலப்பான படங்களில் நடிக்க இருக்கிறார்.


அப்படி அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சாஹூ. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை சுஜீத் இயக்குகிறார். யூவி கிரியேஷன் சார்பில் வம்சி, மற்றும் பிரமோத் தயாரிக்கிறார்கள். சங்கர், ஹசான், லாய் இசை அமைக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்கிறார். 3 முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகிறது. படம் பற்றி இயக்குனர் சுஜீத் கூறியதாவது:


பாகுபலியில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்த பிராபாஸ் எடுத்துக்கொண்ட அக்கறையும், கடின உழைப்பும், மகத்தான முயற்சிகளும், முன்னேற்பாடுகளும் பாகுபலி 2 பற்றிய ஆவலையும் எதிர்பார்ப்புகளையும் மிகவும் அதிகப்படுத்தியுள்ளன. ஆனால், சாஹூவில் நீங்கள் சந்திக்க இருக்கும் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்டவர்.


பிரம்மாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும், காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்துப் பிரமாதமாக உருபெற்றுள்ளது. "சாஹூ" புதுமையும், ரசனையும் உற்சாகமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பு. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக, பல புதிய இடங்களில் படம் பிடிக்கபட்டு வருகிறது என்கிறார் இயக்குனர் சுஜீத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in