ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆச்சர்யம் தான்.. கடந்த 35 வருடங்களில் மோகன்லாலை வைத்து 44 படங்களை இயக்கியுள்ள மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், இத்தனை வருடங்களில் மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியது வெறும் நான்கே படங்கள் மட்டும் தான். உடனே பிரியதர்ஷனுக்கும் மம்முட்டிக்கும் இடையே ஏதாவது கருத்து மோதல் இருக்குமோ என நினைத்துவிட வேண்டாம். மோகன்லாலிடம் எந்த அளவுக்கு நெருக்கமான நட்பில் இருக்கிறாரோ அதே அளவுக்கு மம்முட்டியுடனும் நெருங்கிய நட்பில் இருக்கிறார் பிரியதர்ஷன்..
கடைசியாக 1999ல் 'மேகம்' என்கிற படத்தை மம்முட்டியை வைத்து இயக்கியிருந்தார் பிரியதர்ஷன்.. அதன்பின் இருவரும் இணைந்து பணியாற்றும் விதமான கதைகள் கிடைக்கததால் இந்த கூட்டணி இணைய வாய்ப்பில்லாமலேயே போனது.. இப்போது பதினெட்டு வருடம் கழித்து மீண்டும் மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம் பிரியதர்ஷன்.. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம்.. அனேகமாக 'ஒப்பம்' இந்தி ரீமேக்கை இயக்கிவிட்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தப்படம் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.