ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுனில் சிப்பி இயக்கத்தில், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெள்ளியன்று வெளியான படம் ‛நூர். இப்படத்தில், சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். சுமார் 22 கோடி பட்ஜெட்டில் உருவான நூர் படம் 1450 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான முதல்நாளில் வெறும் ரூ.1.54 கோடி தான் வசூலித்தது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் போதிய வரவேற்பு இல்லை, அதனால் படத்தின் வசூலும் பாதித்துள்ளது. முதல்நாள் தான் வசூல் பாதிப்பு இருந்தது, சனி-ஞாயிறாவது படத்திற்கு வசூல் கிடைக்கும் என்று பார்த்தால் அன்றைய தினங்களிலும் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதுநாள் வரை மூன்று நாட்களில் வெறும். ரூ.5.52 கோடி தான் வசூலித்திருக்கிறது. ஆகையால் படம் தோல்விப்படம் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.