'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பூ ஒன்று புயலானது போன்று கர்ஜனை படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை பழிவாங்கும் வேடத்தில் நடித்துள்ள த்ரிஷா, முதன் முறையாக இந்த படத்திற்காக ரோப்பில் தொங்கியபடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வில்லனை த்ரிஷா வதம் செய்யும் காட்சி படமாக்கப்படுகிறது. இந்த காட்சியில் ஒரு எமோசனல் பாடல் ஒலிக்க, அதன் பின்னணியில் வில்லனை துரத்திச் சென்று பழிவாங்குகிறாராம் த்ரிஷா. இந்த பாடல் கட்சி பல நாட்கள் படமாக்கப்பட்டபோதும், முதல்நாள் இருந்த அதே எனர்ஜியை பாடல் முடிகிறது வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார் த்ரிஷா.
அதற்காக முந்தின நாள் தான் நடித்த காட்சிகளைப் போட்டுப்பார்த்து விட்டு ஒவ்வொரு நாளும் அதே எனர்ஜிக்கு மாறி நடித்தாராம் த்ரிஷா. இதனால் கர்ஜனை த்ரிஷாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும் என்கிறார்கள்.