Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாயிஷா, அடுத்த சிம்ரன்?, ஓவராகப் புகழும் கோலிவுட்

24 ஏப், 2017 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Kollywood-praises-Sayeesha-as-next-simran

தமிழ்த் திரையுலகத்தில் சிம்ரனின் இடத்தை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேறு யாராலும் நிரப்ப முடியவில்ல என்பதே உண்மை. சிம்ரன் அளவிற்கு நடிக்கவும், நடனம் ஆடவும் தெரிந்த ஹீரோயின்கள் யாரும் வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம் தான். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் சிம்ரனுக்கு நிகர் சிம்ரன் தான். 1997ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை சுமார் 7 வருடங்கள் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியவர் சிம்ரன். அவருக்குப் பிறகு அதைவிட அதிக காலம் சினிமாவில் சிலர் இருந்தாலும் அவர்களால் சிம்ரனை நெருங்கக் கூட முடியவில்லை.


வனமகன் படத்தில் அறிமுகமாக உள்ள சாயிஷாவை அடுத்த சிம்ரன் என படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிலர் புகழ்ந்து தள்ளினர். அதற்கு முன்னதாக நடைபெற்ற கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட அறிமுக நிகழ்ச்சியிலும் சாயிஷாவை விஷாலும், கார்த்தியும் போட்டி போட்டுக் கொண்டு புகழ்ந்தனர்.


சிம்ரன் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த 7 வருட காலத்திலும் முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே அளவிற்கு இளமையுடன் இருந்தார். ஆனால், சாயிஷா இப்போதே அக்கா போலத்தான் இருக்கிறார், அவரை ஏன் சிம்ரன் அளவிற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை என பிரபல இயக்குனர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.


ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் என மற்ற ஹீரோயின்களைப் பார்த்து சிலருக்கு போரடித்து விட்டது போலிருக்கிறது. அதனால்தான், சாயிஷாவை விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள் என்கிறார் அந்த இயக்குனர். வனமகன் வரட்டும் சாயிஷா, சாகசம் செய்வாரா இல்லையா என பார்ப்போம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in