ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இங்கிலாந்தில் பிறந்த வளர்ந்த இந்திய அழகியான நிகிஷா படேலுக்கு தென்னிந்திய சினிமா மீது ஆசை. பலவித முயற்சிகளுக்கு பிறகு புலி தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். நரசிம்மா, ஓம் 3டி, தெலுங்கு படங்களில் நடித்தவர் அதன் பிறகு கன்னட சினிமாவில் கரை ஒதுங்கி, என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு தலைவன், கரையோரம், நாரதன் படங்களில் நடித்தார்.
2010ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிகிஷா கடந்த 7 வருடங்களில் 13 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படங்கள் எதுவுமே அவருக்கு ஒரு நல்ல நிலையான இடத்தை பெற்றுத் தரவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது தமிழில் 7 நாட்கள் என்ற படத்தில் பி.வாசுவின் மகன் ஷக்திவாசு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் பிரபு, கணேஷ் வெங்கட்ராம், ஆகியோருடன் அங்கனா ராயும் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். மில்லியன் டாலர் மூவீஸ் சார்பில் கே.கார்த்திக், கே.கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். வி.ஆர்.கவுதம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நிகிஷாவுக்கு வலுவான கேரக்டர் அமைந்திருக்கிறதாம். 7வருடங்களில் கிடைக்காத வெற்றி 7 நாட்கள் படத்தின் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் நிகிஷா படேல்.