Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 61 பஸ்ட்லுக், ஆடியோ, ரிலீஸ் தேதி அறிவிப்பு

23 ஏப், 2017 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Vijay-61-firstlook,-audio,-release-dates-announced

இளைய தளபதி விஜய் - 61 படம் அட்லி இயக்கத்தில் தயாராகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படம், தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முரளிராமசாமி தயாரிக்கும் 100 வது படம்.

இளையதளபதி விஜயின் 61வது திரைப்படம் அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவை சரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர், நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.

இப்படத்தின் பஸ்ட்லுக் (முதல்பார்வை) இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல்அரசு சண்டை பயிற்சியையும், விஜயேந்திர பிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in