ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'வனமகன்' படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக, கதாநாயகியாக நடித்திருக்கிறார் சாயிஷா. மும்பை வரவான இவர் பாலிவுட் நடிகர் திலிப்குமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்!
'வனமகன்' படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில், கார்த்தி, விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் சாயிஷா! இந்த படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைக்கிறார்!
'வனமகன்' படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சாயிஷா குறித்து தன் மனதில் பட்டதை பகிர்ந்து கொண்டார் ஹாரிஸ் ஜெயராஜ். ''நான், 'லேசா லேசா' படத்தில் பணியாற்றும்போதுதான் த்ரிஷாவை முதன் முதலாக பார்த்தேன். அப்போது த்ரிஷாவை பார்த்ததும், சினிமாவில் இவர் பெரிய ஒரு இடத்துக்கு வருவார் என்பது என் மனதில் பட்டது.
அதைப்போலவே, 'எங்கேயும் காதல்' படத்தில் பணியாற்றும்போது ஹன்சிகாவை பார்த்தபோதும் என் மனதில் பட்டது. நான் எண்ணியது போலவே த்ரிஷா, ஹன்சிகா இருவரும் சினிமாவில் பெரிய இடத்துக்கு வந்தார்கள்! அதற்கு பிறகு எத்தனையோ படங்களில் பணியாற்றிவிட்டேன். எத்தனையோ கதாநாயகிகளை பார்த்துவிட்டேன்.
ஆனால், இப்போது 'வனமகன்' படத்தில் பணியாற்றும்போது சாயிஷாவை பார்த்தபோதும் அதே உணர்வு ஏற்பட்டது. இப்படியான உணர்வு ஏற்படுவது ஒரு சிலரை பார்க்கும்போது மட்டும் தான்! சாயிஷா 'வனமகன்' படத்தில் பெர்ஃபார்மென்ஸ், டான்ஸ் என்று அசத்தியிருக்கிறார்! த்ரிஷா, ஹன்சிகாவை போல சாயிஷாவும் சினிமாவில் பெரிய இடைத்தைப் பிடிப்பார்'' என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்!
அவர் பேசுவதைக் கேட்டதும் சாயிஷாவின் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் வெளிச்சம்.