'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி சாயிஷா. தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகில் நடித்த முதல்படமான அகில் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவ்கன் உடன் சிவாய் படத்தில் நடித்தவர், இப்போது தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்தில் சாயிஷா தான் ஹீரோயின். டார்ஷன் பட பாணியில் இப்படம் உருவாகி வருகிறது. வனத்திலேயே வாழ்ந்த ஒருவன் நகரத்திற்கு வந்தபிறகு அவன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, அதனூடன் அவன் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதை சொல்கிற படம்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. பாலா வெளியிட மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மகன் ஆதவ் இசைதட்டை பெற்றுக் கொண்டார். இசை வெளியீட்டின் போது சாயிஷா போட்ட கடற்கரை டான்ஸ் திரையிடப்பட்டது. இதை விழாவிற்கு வந்த அனைவரும் கண் இமைக்காமல் பார்த்தார்களாம். அப்படி ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் சாயிஷா. வனமகன் படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக பிரபுதேவா இயக்கத்தில், விஷால், கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா படத்திலும் நடிக்கிறார். அழகுடன் நடிப்பு, டான்ஸ் என சகலத்திலும் அசத்தியிருக்கிறாராம் சாயிஷா. ஆகையால் தமிழ் சினிமாவில் நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்கிறார்கள்.