ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்த படம் 'விஸ்வரூபம்'. அந்தப் பிரச்சனைகளே படத்திற்கு நல்ல விளம்பரத்தைத் தேடிக் கொடுத்ததால் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் அப்போதே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளதால், அந்தப் படத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்பாக 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல்ஹாசன் முயற்சி எடுத்து வந்தார். அவை ஒரு வழியாக சமாதானமாக நடைபெற்று தற்போது படத்தின் வேலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளும், இசைக்கோர்ப்பு வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. கமல்ஹாசனிடம் இணை இயக்குனராக இருக்கும் ராஜேஷ் எம் செல்வா இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரானும் படத்தின் பின்னணி இசைப் பணிகளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.