தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. காஜல் அகர்வால், அக்சராஹாசன், தம்பிராமைய்யா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். சுனாமியால் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டபோது, தானும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தவர் இந்த விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவேகம் படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தி படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் இருப்பதால் அஜித்தின் முந்தைய பட வில்லன்களை விடவும் விவேக் ஓபராய்க்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்த படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய் இடம்பெறும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், தற்போது பல்கேரியாவில் விவேகம் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்போதுவரை கடும் குளிரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பல்கேரியாவில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதனால் உங்களது அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று அஜித் ரசிகர்களிடம் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார் விவேக் ஓபராய்.