ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ரஜினியின் 2.0 பட வெளியீடு அடுத்தாண்டிற்கு தள்ளிவைக்கப்படுவதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜனியின் நடிப்பில் உருவாகி உள்ள 2.0படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் என திரைப்பட தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இந்திய அளவில் பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் ரூ.400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தை தீபாவளியன்று காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உலக தரத்திற்கு ஏற்ற வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தேதி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.