பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛முன்னா மைக்கேல்'. டைகருடன் நவாசுதீன் சித்திக், நித்தி அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான டைகர் ஷெரப் எனும் முன்னா, எப்படி நடனத்தில் அவரைப்போன்று புகழ்பெற்றார் என்பது படத்தின் கதை. இப்படத்தை சபீர்கான் இயக்க, ஈராஸ் மற்றும் விக்கி ராஜாணி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னா மைக்கேல் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள். அதன்படி படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.