Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ்க்கு சாதகமாக தீர்ப்பு

21 ஏப், 2017 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Judgement-favour-on-Dhanush-case

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.


தனுஷ் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களுக்கு பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.65 ஆயிரம் பணம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இதுதொடர்பாக தனுஷ் நேரில் ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து தனுஷூக்கு அங்க அடையாளங்கள் உள்ளிட்டவைகள் மருத்துவரின் உதவியோடு சரிபார்க்கப்பட்டன. அதேப்போன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடந்தன. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் கோர்ட்டில் நடைபெற்றன. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதன்படி அனைத்து அம்சங்களும் தனுஷ்க்கு சாதகமாக இருப்பதால் மேலூர் கோர்ட்டில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் இந்த வழக்கில் தனுஷ்க்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது தனுஷை நிம்மதி அடைய செய்திருக்கிறது.


Advertisement
சென்னையில் ஐரோப்பிய யூனியன் பட விழாசென்னையில் ஐரோப்பிய யூனியன் பட விழா பாகுபலி முதல் பாகம் இன்று மீண்டும் வெளியீடு பாகுபலி முதல் பாகம் இன்று மீண்டும் ...


வாசகர் கருத்து (13)

Nagarajan Ks - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21 ஏப், 2017 - 22:56 Report Abuse
Nagarajan Ks In such cases a fair DNA test is the ultimate proof. Why was it not done? All other documents can be manipulated by either party.
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
21 ஏப், 2017 - 14:17 Report Abuse
ranjan dna டெஸ்ட் என்னாச்சு
Rate this:
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
21 ஏப், 2017 - 14:14 Report Abuse
MentalTamilan இங்க கருத்து சொல்லுகிற எல்லோரும் தனுஷ் தான் தப்புனு சொல்றது எப்புடின்னு தெரியல? ரெண்டு பேர் மாசம் 65000 கொடுக்கணும்னு கேஸ் குடுக்கறப்போ அங்க காசுதான் முக்கியமாபடுதுனு தெரியலையா? காசு வேண்டாம் எங்க பய்யன் எங்ககிட்ட வந்தா போதும்னு கேஸ் கொடுத்திருந்த அவங்க உண்மையான அம்மா அப்பாவ இருக்க சான்ஸ் iruku. அப்படியே தத்து குடுத்திருந்தாலும் Inga அவங்க கேக்குறது பணம் மட்டும்தான் makkalae. தனுஷ் ஒரு வேலை வேலை வெட்டி இல்லாம இருந்திருந்தால் கேஸ் போட்டுருப்பாங்களா? ஜஸ்ட் ஏதாச்சும் கருத்து சொல்லணும்னு சொல்றத நிறுத்துங்கப்பா.
Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
21 ஏப், 2017 - 13:53 Report Abuse
Sambasivam Chinnakkannu காசுக்கு ,பணத்திற்கு ,,,பயத்திற்கு ஆதரவான தீர்ப்பு ,,,,,இப்படித்தான் தோணுகிறது ,,
Rate this:
panneerselvam.m - coimbatore,இந்தியா
21 ஏப், 2017 - 13:41 Report Abuse
panneerselvam.m தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகபடுத்திய பெற்றோரையே இவர்கள் என்னை பெற்றவ்ர்கள் இல்லை என்றவனுக்கு அவன் மனஷாட்சியே தூக்குகயறு
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
  Tamil New Film Narai
  • நரை
  • இயக்குனர் :விவி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in