Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யு-டியூப் - சிக்கலை ஏற்படுத்தும் ஆடியோ நிறுவனங்கள்

20 ஏப், 2017 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Audio-companies-trouble-to-you-tube-user

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தத் தற்போது பல வழிகளைக் கையாள வேண்டியிருக்கிறது. நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிலையங்கள், இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், யு-டியூப் சேனல்கள் என ஒவ்வொரு படம் வெளிவரும் போதே சில லட்சங்களையோ அல்லது கோடிகளையோ படங்களின் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கிறார்கள். ஆனால், சமயங்களில் அந்த செலவுகளைக் கூட படங்கள் வசூலிப்பதில்லை என்பது தனிக் கதை.


இப்போது யு-டியூப் மூலமே டிரைலர்களும், டீசர்களும் வெளியிடப்படுகின்றன. அந்தந்த படங்களின் ஆடியோ உரிமைகளை வாங்கும் ஆடியோ நிறுவனங்கள், யு-டியூப் உரிமைகளையும் சேர்த்தே வாங்குகின்றன. இதனால், ஆடியோ நிறுவனங்கள் வாங்கியுள்ள படங்களின் டிரைலர்களையும், டீசர்களையும், பாடல்களையும் மற்ற யாரும் யு-டியூபில் பயன்படுத்த முடிவதில்லை.


மாறாக அவற்றை சில வினாடிகள் வரை மட்டுமே பயன்படுத்தினால் கூட சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனங்கள் அவற்றிற்கான 'காப்பிரைட்' உரிமை தங்களிடம் இருப்பதைத் தெரிவித்து அதைப் பயன்படுத்திய யு-டியூப் பயனாளர்களிடம் ராயல்டி தொகையை கேட்கின்றன. அப்படி தர மறுப்பவர்களின் யு-டியூப் சேனல்களும் பின்னர் முடக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இனிமேல் பாடல்கள், டிரைலர்கள் ஆகியவற்றை ஒளிபரப்ப பணம் கேட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அது போலவே, யு-டியூபில் அவற்றை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கும் வழி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள், ரசிகர்களின் துணை கொண்டுதான் யு-டியூபில் அதிகப்படியான பார்வைகளைப் பெறுகின்றன. அதேசமயம் மற்றவர்களும் யு-டியூபில் டிரைலர்களையும், டீசர்களையும் பயன்படுத்தினால் அந்தப் படங்களுக்கான விளம்பரம் இன்னும் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, டிரைலர்கள், பாடல்கள், டீசர்கள் ஆகியவற்றின் உரிமையை ஆடியோ நிறுவனங்களுக்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள்.


இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கேற்ப தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இதற்கும் ஒரு நல்ல முடிவு எடுக்குமா என்பது யு டியுப் பயனாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
ஏப்ரல் 21 - பெரிய வெளியீடுகள் இல்லைஏப்ரல் 21 - பெரிய வெளியீடுகள் இல்லை வட சென்னை தாமதம் ஏன்.? - மனம் திறந்த வெற்றிமாறன் வட சென்னை தாமதம் ஏன்.? - மனம் திறந்த ...


வாசகர் கருத்து (2)

Vel - Coimbatore,இந்தியா
21 ஏப், 2017 - 09:00 Report Abuse
Vel சட்டப்படி இப்போது நடப்பது தான் சரி. இதை youtube இல் - ilayaraja இசை-க்கும் கடுமையாக செயல்படுத்த வேண்டும்
Rate this:
Pulikutty - Mumbai,இந்தியா
20 ஏப், 2017 - 18:37 Report Abuse
Pulikutty ஒரே ட்ரைலர் மற்றும் பாட்டை எதற்கு மற்றவர்களும் உபயோக படுத்த வேண்டும். ஒரு ட்ரைலரை ஒருத்தர் அப்லோடு செய்தாலும் அனைவரும் பார்க்க முடியும். எதற்கு மற்றவர்கள் அதே வீடியோ-வை அப்லோடு செய்ய வேண்டும். இசை நிறுவனம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள், அவர்கள் வெளியிடுவது சரி. மற்றவர்கள் எதற்கு அதே வீடியோ-வை உப்லோஅது செய்ய வேண்டும், இது எப்படி படத்திற்கு விளம்பரம் கிடைக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film thirupathisamy kudumbam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in