'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கவண்'. மீடியாக்களில் நடக்கும் அரசியலைப் பற்றி சொன்ன இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பார்த்துப் பழகிய காட்சிகளுடன் படம் இருந்ததால்தான் பெரிய வரவேற்பையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் போட்டிக்கு வேறு படங்கள் இல்லாததால் 'கவண்' படம் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் தப்பித்துக் கொண்டது என்கிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக நடித்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பல கதாநாயகர்கள் போட்டி போட்டார்கள். கே.வி.ஆனந்த் தேடிச் சென்று கதை சொன்ன சிலர் சில காட்சிகளை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் சொல்லாமல் வந்த வாய்ப்பைப் பெற்று தன் பட்டியலில் ஒரு வெற்றிப் படத்தைச் சேர்த்துவிட்டார் விஜய் சேதுபதி.
இப்படத்தின் வெற்றியை 'கேக்' வெட்டி 'பார்ட்டி' வைத்து படக்குழுவினர் கொண்டாடியிருக்கிறார்கள். இயக்குனர் கே.வி.அனந்த், இசையமைப்பாளர் ஆதி, விஜய் சேதுபதி, விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.