ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'எமன்' படத்தை தொடர்ந்து ராதிகாவின் ராடண் மீடியா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கும் 'அண்ணாதுரை' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. பிரீ புரொடக்ஷ்ன் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாதுரை படம் ட்ராப்பாகிவிட்டதாக கடந்த மாதமே செய்திகள் அடிபட்டன. அதை அப்போது விஜய் ஆண்டனியே மறுத்தார்.
கத்திரிக்காய் காய்த்தால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பதுபோல், அண்ணாதுரை படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணாதுரை படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டிருந்த 'காளி' படத்தின் படப்பிடிப்பை உடனே துவங்க உள்ளார்கள்.
'காளி'யின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் துவங்குகிறது. இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் விஜய் ஆண்டனியே காளி படத்துக்கு இசை அமைக்கிறார்.
ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினி நடித்து 1980-ல் வெளியான படத்தின் பெயர் தான் 'காளி'. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் தீ விபத்து ஏற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களும், ஏராளமான குதிரைகளும் தீயில் கருகிறார்கள். காளி பட தலைப்பை விஜய் ஆண்டனி தனது படத்திற்கு சூட்டியுள்ள இந்த நேரத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவரும் தன்னுடைய படத்துக்கு காளி என்று பெயர் சூட்டியுள்ளார். அதன் ஃபர்ஸ்ட்லுக்குடன் அண்மையில் ரஜினியை சந்தித்தும் வந்துள்ளார். அதனால் காளி என்ற தலைப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.