ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் கதாநாயகிகள் அந்தக் காலக் கதாநாயகிகள் போல இல்லை. அந்தக் காலத்தில் கதாநாயகிகள் பலருக்கும் பாடவும், ஆடவும் மட்டுமே அதிகம் தெரிந்திருக்கும். ஒரு சிலர் மட்டுமே கதாநாயகர்களும் செய்யும் வீர விளையாட்டுக்களையும் படங்களில் நிகழ்த்திக் காட்டுவார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை. கதாநாயகிகளும், கதாநாயகர்களுக்கு இணையான ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வந்துவிட்டார்கள். அதனால், அவர்களும் பல வீர விளையாட்டுக்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
சினிமா சண்டை மட்டும் கற்றுக் கொள்ளாமல் வாள் வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பம் என மற்ற பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் மீதும் நம் கதாநாயகிகளுக்கு ஆர்வம் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ருதிஹாசன் தற்போது லண்டனில் 'சங்கமித்ரா' படத்திற்காக சண்டைப் பயிற்சியைப் பெற்று வருகிறார். இதற்கு முன் 'பாகுபலி' படத்திற்காக தமன்னாவும் கத்திச் சண்டை பயிற்சி பெற்றார். இப்போது சமந்தா சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறாராம். ஆனால், அது எந்தப் படத்திற்காகவும் இல்லையாம், பொழுது போக்கிற்காக கற்றுக் கொண்டிருக்கிறேன் என ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது சமந்தா சிலம்பம் சுற்றும் அழகே தனி.
விரைவில் திருமணம் நடக்க உள்ளதால் முன்னேற்பாடாக சண்டைகளைக் கற்றுக் கொள்கிறாரோ...?.