வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர் த்ரிஷா தான். 30 வயதைக் கடந்த ஒருவர் ஒரே சமயத்தில் 6 படங்களில் நாயகியாக நடிப்பது என்றால் சும்மாவா?. 20 வயது நாயகிகள் கையில் கூட இத்தனைப் படங்கள் இல்லை. த்ரிஷா கைவசம் தற்போது “மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 1818, 96,” ஆகிய 5 தமிழ்ப் படங்களும் 'ஹே டியூட்' என்ற மலையாளப் படமும் உள்ளன. இவற்றில் 'மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை' ஆகிய படங்களின் படப்பிடிப்பு த்ரிஷா முடித்துவிட்டார். மற்ற படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
த்ரிஷா முன்னணி கதாநாயகியாக இருந்த போது கூட ஒரே சமயத்தில் இத்தனை படங்களில் நடித்திருக்க மாட்டார். ஆனால், இப்போது அவரிடம் இத்தனை படங்கள் ஒரே சமயத்தில் குவிந்திருப்பது மற்ற இளம் ஹீரோயின்களுக்கும் கண்டிப்பாகப் பொறாமையாகவே இருக்கும். திரைப்படங்களில் நடிக்க வந்து 15 வருடங்களுக்குப் பிறகும் த்ரிஷா முன்னணியில் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
த்ரிஷா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அவருடைய தோற்றம்தான். அவரைப் பார்த்தால் யாரும் 30 வயதைக் கடந்தவர்கள் என்று சொல்ல மாட்டார்கள். இப்போதும் பாவாடை, தாவணியில் மழையில் நனைந்து கொண்டு 'நு ஒஸ்தானன்டே' என ஆடிப் பாடினால் அதைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.