‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள சினிமாவில் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் துணிச்சலாக நடித்து வருபவர் பிருத்விராஜ். குறிப்பாக, தமிழில் அறிமுகமான கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமான பிருத்விராஜ் அதன்பிறகு ஹீரோவாகி விட்டபோதும், கடைசியாக சித்தார்த்துடன் இணைந்து நடித்த காவியத்தலைவன் படத்திலும் வில்லன் வேடத்திலேயே நடித்திருந்தார்.
அதன்பிறகு இந்தியில் நான் சபானா என்ற படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார் பிருத்விராஜ். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காத அவர், தற்போது கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் பிருத்விராஜ். இதற்கு முன்பு அவர் தமிழில் நடித்த வில்லன் வேடங்களை விட அதிரடியான ஸ்டைலிசான கெட்டப்பில் இந்த படத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிருத்விராஜ், ராவணன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.