தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாக்யராஜின் உதவியாளர்களில் ஆர்.பாண்டியராஜன் குறிப்பிடத்தக்கவர், தனது 21 வயதிலேயே கன்னிராசி என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அதன் பிறகு ஆண்பாவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாண்டியராஜன், சமீபகாலமாக முழுநேர நடிகராகிவிட்டார். நான் இந்த மாதிரியான வேடம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று எந்தவித கண்டிசனும் பேசாமல், தன்னை நம்பி டைரக்டர்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் அதில் நடித்து வரும் பாண்டியராஜன், தற்போது சில படங்களில் அப்பா வேடங்களிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் இளவட்ட டைரக்டர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்கிறாராம் பாண்டியராஜன். அவர்களுக்கு அவ்வப்போது நல்ல அட்வைஸூம் கொடுக்கிறாராம். முக்கியமாக, நல்ல படம் கொடுங்கள் அப்படி கொடுத்தால் சினிமா வரலாற்றில் பேசப்படுவீர்கள். 40 வருடம் கழித்தாலும் யாராவது வந்து உங்களுக்கு கைகொடுப்பார்கள் என்று பக்குவமாக எடுத்துரைக்கிறாராம். இதனால் இளவட்ட இயக்குனர்கள் மத்தியில் பாண்டியராஜனுக்கான மதிப்பும், மரியாதையும் உயர்ந்து வருகிறது.