Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யை ஆச்சர்யப்படுத்திய தம்பிராமைய்யாவின் மகன்!

20 ஏப், 2017 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Vijay-impressed-by-thambi-ramaiah-sons-dance

நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யா. இவர் இன்பசேகரன் இயக்கியுள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தில் டி.இமானின் இசையில் உருவாகியுள்ள, ஏனடி என்று தொடங்கும் ஒரு டூயட் பாடலின் மேக்கிங் வீடியோ யு-டியுப்பில் வெளியாகி 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


மேலும், இப்படத்தில் டபுள் ஓகே என்றொரு ஓப்பனிங் பாடல் உள்ளதாம். அதில் மிகச்சிறப்பாக நடனமாடியிருக்கிறாராம் உமாபதி ராமைய்யா. அதைப்பார்த்து அசந்து போன தம்பி ராமைய்யா, மகனின் நடனம் குறித்து நட்பு வட்டாரங்களில் பெருமையாக பேசி வருகிறார். அதோடு, அந்த பாடலை விஜய், அஜித், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களிடம் போட்டுக்காட்டியுள்ளார். அதில், உமாபதியின் நடனத்தைப்பார்த்து, மூன்று பேருமே சிறப்பாக நடனமாடியிருப்பதாக சொன்னார்களாம். அதில் விஜய், தம்பி ரொம்ப பிரமாதமாக ஆடியிருக்கிறார் என்று தனது வியப்பை பெரிய அளவில் வெளிப்படுத்தினாராம். விளைவு, விஜய்யைப்போலவே அதாகப்பட்டது மகாஜனங்களே படம் வெளியாகும்போது எனது மகனின் நடிப்பு, நடனத்தைப்பார்த்து ரசிகர்களும் ஆச்சர்யப்படப்போகிறார்கள் என்று கூறி வருகிறாராம் தம்பி ராமைய்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in