ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய படம் காக்கா முட்டை. இந்த படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படத்தில் அவரது பர்பாமென்ஸ் பேசப்பட்டதை அடுத்து தற்போது பேசப்படும் நடிகை பட்டியலில் இடம் பிடித்துள்ளார் அவர். மேலும், காக்கா முட்டை படத்தை தயாரித்த தனுசுடன் ஜோடி சேரவேண்டும் என்கிற ஆசையும் தனக்கு இருப்பதாக கூறிவந்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இப்போது வடசென்னை படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக முதலில் சமந்தா நடிக்கயிருந்தார். அதன்பிறகு அமலாபால் கமிட்டானார். ஆனால் இப்போது அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனுசுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதுபற்றி அவரைக் கேட்டபோது, வடசென்னை படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் அமலாபால் இந்த படத்தில் இல்லை என்றதும், என்னை அழைத்தனர். அதற்கு காரணம் காக்கா முட்டை படம் தான். அந்த படத்தைபோன்று குப்பத்து பெண் வேடம் என்பதால், தயங்காமல் என்னை அழைத்து விட்டனர். ஆக, காக்கா முட்டை மூலம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற நான், இப்போது தனுஷ் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடி சேரும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.