மணிரத்னமும், தாலி சென்டிமென்ட்டும்...?? - Maniratnams Thali sentiment
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னமும், தாலி சென்டிமென்ட்டும்...??

20 ஏப், 2017 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Maniratnams-Thali-sentiment

மணிரத்னம் எப்போது 'தாலி சென்டிமென்ட்டை' வைத்து குடும்பப் படங்களை எடுத்திருக்கிறார் என கேள்வி கேட்பவர்களுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பதிவைப் பார்த்தால் வாயை மூடிக் கொள்வார்கள். இளமை ததும்பும் படங்களை எடுப்பவர் மணிரத்னம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இளமையான காதல் படமாக இருந்தாலும் மணிரத்னம் படத்தில் குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அவருடைய அனைத்துப் படத்திலும் காதல் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு சென்டிமென்ட்டும் இருக்கும்.


'காற்று வெளியிடை' படம் மணிரத்னம் இதுவரை எடுத்த படங்களிலேயே மிகச் சுமாரான படம் என விமர்சனங்கள் அதிகம் வந்தன. எவ்வளவு நாளைக்குத்தான் அவரை அரைத்த மாவையே அரைப்பார் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், பதிவுகள் என பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.


இன்று நம் கண்ணில் பட்ட ஒன்று மணிரத்னத்தின் முந்தைய படங்களையும் 'தாலி சென்டிமென்டையும் பற்றி குறிப்பிட்டு இருந்தது. எந்த அளவிற்கு நம் ரசிகர்கள் படங்களை கவனிக்கிறார்கள் என்பதை இயக்குனர்கள் புரிந்து கொண்டால் சரி. அந்த பதிவு இதுதான்...


தாலிகட்டாம அடுத்தவ கூட வாழ்ந்து குழந்தை பெத்துகிட்டா - அக்னி நட்சத்திரம்.


தாலிகட்டாம குழந்தை பெத்து கூட்ஸ்ல வீசினா - தளபதி.


தாலி கட்டியும் வாழாமல் இருந்தா - மௌன ராகம்


தாலி கட்டி வாழ்ந்தா - அலை பாயுதே.


தாலி கட்டாம வாழ்ந்தா - ஓ காதல் கண்மணி.


தாலிகட்டாம குழந்தை பெத்துகிட்டா- காற்று வெளியிடை.


அடுத்து.... மணிரத்தினம் சார்...?


Advertisement
பாகுபலி பட வாய்ப்பு எனக்கு கிடைத்த வரம்: தமன்னாபாகுபலி பட வாய்ப்பு எனக்கு கிடைத்த ... எதற்கும் தயங்க மாட்டேன் : லண்டனில் ‛சங்கமித்ரா' ஸ்ருதிஹாசன் எதற்கும் தயங்க மாட்டேன் : லண்டனில் ...


வாசகர் கருத்து (2)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
20 ஏப், 2017 - 19:48 Report Abuse
Neelaa அடுத்த மணிரத்னம் புரட்சி என்னவாக இருக்கும்? ஹீரோ, இன்னொரு ஆணுக்கு தாலி கட்டுவான் வாடகை தாய் மூலமாக இரட்டைக்குழந்தையும் பெற்றுக்கொள்ளுவான்..
Rate this:
20 ஏப், 2017 - 14:19 Report Abuse
S.Sheikkader அடுத்தவன் தாலி கட்டுன பொண்ண ஆசைப்பட்டா "ராவணன்"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in