விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது! அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், அஜித்தின் உதவியாளராக கமல்ஹாசனின் மகள், அக்ஷரா ஹாசனும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலருமான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை அஜித் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், சத்யஜோதி பிலிம்ஸ் தரப்பில் விசாரித்தபோது, விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசரை எடிட்டர் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், அதை அஜித் பார்த்துவிட்டு ஓகே சொன்ன பிறகு மே 1 ஆம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, பர்ஸ்ட் லுக் டீசரை தொடர்ந்து விவேகம் படத்தின் ஆடியோ, ஜூன் மாதம் இறுதியில் வெளியாகிறது. 'விவேகம்' படத்தை ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏற்றார்போல் பட வேலைகளை படு விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் படக்குழுவினர்! ஒருவேளை தாமதமானால் ஆகஸ்ட் கடைசி வாரம் வெளியிட உள்ளனர்.