அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. அதற்கு பிறகு சமந்தா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதில் அந்த கேரக்டரில் அமலாபால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது அமலாபால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததும் மீண்டும் நடிப்பில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்தார் அமலாபால். அதோடு, தனக்கு நெருக்கமான ஹீரோக்களிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டார்.
அதன் காரணமாகவே வட சென்னை படத்தின் கதாநாயகி வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் தனுஷ். வட சென்னை படத்தில் ஒப்பந்தமான நேரமோ என்னவோ அமலாபாலுக்கு நிறைய படங்கள் கமிட்டாகத் தொடங்கின. தற்போது கையில் நிறைய படங்கள் உள்ளதால், கால்ஷீட் பிரச்சனையை காரணம்காட்டி வட சென்னை படத்திற்கு கால்ஷீட் தராமல் இழுத்தடித்திருக்கிறார். எனவே அந்தப் படத்திலிருந்து அமலாபால் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது முறையாக கதாநாயகி மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் தனுஷுடன் ஆன்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.