டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் அரபு தாக்கு என்ற படத்தில் துருக்கி நடிகை பெர்குஸார் கொரல் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி படத்தில் நடித்த நிகேஷ் ராம் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, ரவிமரியா, உள்பட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவு செய்கிறார். ரத்தீஸ் வேஹா இசை அமைக்கிறார். துருக்கி நடிகை நடிப்பது பற்றி இயக்குனர் பிரான்சிஸ் கூறியதாவது:
இது துபாயில் நடக்கும் கதை. தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு வேலைக்குச் செல்லும் ஹீரோவுக்கு அங்கு வாழும் அரபு பெண் மீது காதல். அந்த பெண்ணுக்கும் தமிழ் மீது தீராத ஆர்வம், அதனால் ஹீரோவை காதலிக்கிறார். ஆனால் ஒரு அரபு பெண் தமிழ் இளைஞரை காதலிப்பது சர்வதேச பிரச்சினை. அதை சமாளித்து அவர்கள் காதலில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது கதை. ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயாராகிறது.
இதில் நடிக்க அரபு நடிகை தேடினோம். அரபு பெண்கள் சினிமாவில் நடிப்பதில்லை. அதனால் துருக்கி நடிகை பெர்குஸாரை அணுகி கதை சொன்னோம். கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு முழுவதும் துபாயில் நடக்கிறது. படத்தின் பாடல் வெளியீடு, மற்றும் பட வெளியீட்டின் போது பெர்குஸாரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர இருக்கிறோம். என்றார் பிரான்சிஸ்.