இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புரூஸ்லி படத்தை அடுத்து அடங்காதே, 4 ஜி, நாச்சியார், ஐயங்கரன், செம, குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம் என பல படங்களுக்கு கால்சீட் கொடுத்துள் ளார் ஜி.வி.பிரகாஷ். இதில் சர்வம் தாள மயம் படத்தை ராஜீவ்மேனன் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் அந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதனால் தனது மாமா ரகுமானின் இசையில் முதன்முதலாக நடிக்கப்போகிற உற்சாகத்தில் அந்த படத்தில் கமிட்டானார் ஜி.வி.பிரகாஷ்.
ஆனால் அந்த படம் அறிவிக்கப்பட்டதோடு சரி, இன்னும் படவேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. 6 மாதம் கழித்துதான் அப்படத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம் ராஜீவ்மேனன். காரணம், தற்போது இந்தியில் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராஜீவ்மேனன். அந்த பட வேலைகள் முடிவதற்கு இன்னும் 6 மாதம் ஆகுமாம். அந்த படத்தை முடித்த பிறகுதான் சர்வம் தாள மயம் படத்தை தொடங்குகிறாராம். அதனால் அந்த படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை பாலாவின் நாச்சியார் படத்திற்கு கொடுத்து நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.