ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வித்யாபாலன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் பேகம் ஜான். பெங்காலி மொழியில் வெளியான ராஜ்காஹினி படத்தின் ரீ-மேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. பாலியல் தொழில் செய்யும் வித்யாபாலன் உள்ளிட்ட 11 பெண்கள், தாங்கள் வசிக்கும் இடத்தை காப்பாற்ற போராடும் கதை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பு இல்லை. அதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியான மூன்று நாட்களில் பேகம் ஜான் படம் வெறும் ரூ.11.48 கோடி தான் வசூலித்திருக்கிறது. மூன்று நாட்களில் சுமார் ரூ.20 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‛பாஸ்ட் அண்ட் பியுரியஸ் 8' வெளியானதால் ‛பேகம் ஜான்' படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பேகம் ஜான் படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். சமீபகாலமாக வித்யாபாலன் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலனவை தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.