ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்து வரும் 'ஸ்பைடர்' படம் ஜுன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை செல்லும் என்கிறார்கள். சில திருப்தியில்லாத காட்சிகளை மீண்டும் படம் பிடிக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளாராம். அதனால், இந்த மாதத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் வரை செல்கிறது.
வெளியீட்டிற்கு ஒரு மாதம் முன்னர் வரை படப்பிடிப்பு நடந்தாலும் தற்போது படத்தின் படத்தொகுப்பு பணிகளும் கூடவே நடைபெற்று வருவதால் தாமதம் என்ற பிரச்சனை எழ வாய்ப்பில்லை என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. யு டியூபில் இப்படத்தின் முதல் பார்வைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. 70000 பேர் லைக் செய்துள்ளனர். தலைப்புப் பற்றி இருவேறு கருத்துகள் நிலவி வந்தாலும் மகேஷ் பாபு ரசிகர்கள் படத்தின் பெயரை வரவேற்றிருக்கிறார்கள்.
படத்தின் சாட்டிலைட் உரிமை முடிந்த நிலையில் படத்தின் மற்ற வியாபாரப் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.