ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் நடிக்க, அவருடன் தியா மிர்ஸா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் தத்தின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சமீபத்தில், சஞ்சய் தத் போன்று ரன்பீர் தோற்றமளிக்கும் ஸ்டில்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்தப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், படத்தின் ஆரம்ப காட்சிகளில் குரல் கொடுக்க இருக்கிறார் சஞ்சய் தத். இப்படம் எப்படிப்பட்டது, எந்த மாதிரி பயணிக்கும் என்பதை தன் சொந்த குரலில் பேச உள்ளார் சஞ்சய். விரைவில் அதற்கான குரல் பதிவு நடைபெற இருக்கிறது. தற்போது மும்பையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் படம் ரிலீஸாக இருக்கிறது.