'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருகிற தீபாவளிக்கு இந்திய அளவில் ஏகப்பட்ட போட்டிகள் உருவாகும் என தெரிகிறது. ஆனால் அப்படி போட்டி போடும் படங்கள் அனைத்தும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வரும் ‛2.O'-க்கு ஈடு கொடுக்குமா...? என்று தெரியவில்லை. இருந்தாலும் அன்றைய தினம் ஏற்கனவே, அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போது இந்த ரேஸில் அஜய் தேவ்கனும் இணைந்துள்ளார். அஜய் தேவ்கன், தற்போது கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான கோல்மால் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நடித்து வருகிறார். ரோகி ஷெட்டி இயக்கி வருகிறார். முந்தைய பாகங்களை போன்று இதுவும் பக்கா காமெடி படமாக உருவாகி வருகிறது. தீபாவளி ரேஸில் எந்தெந்த படங்கள் வெற்றி போற போகிறது என்று அன்றைய தினம் தெரிந்துவிடும்.