ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் வடசென்னை ரவுடி வேடத்தில் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கி டையே நடக்கும் கதையில் இந்த படம் உருவா கிறது. இதில் கோஷ்டி ரவுடியின் ஆட்களை ஒவ்வொருவ ராக ஸ்கெட்ச் போட்டு அழிக்கும் விக்ரம், இதுவரையில்லாத அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டி ருக்கிறார். குறிப்பாக, ஜெமினி பட சாயலில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கும் அதிரடி ஆட்டம் ஆடுகிறார் விக்ரம்.
மேலும், இப்படத்தில் தாரைத்தப்பட்டையில் நடித்த ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்தபோதும் இப்போது முக்கிய வில்லனாக இந்தி, தெலுங்கு படங்களில் மெகா வில்லனாக நடித்துக்கொண்டி ருக்கும் ரவிகிஷண் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவரை சூரியுடன் காமெடி காட்சிகள், தமன்னாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்த விக்ரம், வருகிற 21-ந்தேதி முதல் பாலிவுட் வில் லன் ரவிகிஷணுடனான காட்சிகளில் நடிக்கிறார். தொடர்ந்து சென்னையில் 10 நாட்கள் நடை பெறும் இந்த படப்பிடிப்பில் வசன காட்சிகள் மட்டுமின்றி சண்டை காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.