'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
டிஸ்கவரி சேனல் போன்று உலக அளவில் ஒளிபரப்பாகி வரும் இன்னொரு சேனல்தான் டிராவல் எக்ஸ்பி. இதுவரை ஆங்கிலம் உள்பட சுமார் 18 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இந்த சேனலில் தமிழ்ப்புத்தாண்டு முதல் தமிழில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், முதல் தமிழ் நிகழ்ச்சியாக கிரேஸி புட்ஸ், கிச்சன் சமையல் என்ற நிகழ்ச்சிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் என்னவென்றால், டூரிஸ்ட் கைடு போன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் ஒருவர், அந்த ஊரிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப்பார்ப்பது. அதையடுத்து அங்குள்ள சிறந்த உணவு கூடங்களுக்கு சென்று சாப்பிட்டுக்கொண்டே அந்த உணவுகளின் தயாரிப்பு முறையைப்பற்றி கேட்டறிவது போன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு ஊட்டிக்கு போக வேண்டுமென்கிறபோது அங்குள்ள இடங்களை தெரிந்து கொள்ள முடிவதோடு, எந்த இடத்தில் எந்தமாதிரியான உணவுகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியுமாம். இதில், கிச்சன் ஸ்பெசல் நிகழ்ச்சியை தாமுவும், கிரேஸி புட்ஸ் நிகழ்ச்சியை அது இது எது நாஞ்சில் விஜயனும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.