டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நேற்று முன் தினம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்துள்ள சகாவு' வெளியானது. இதில் சகாவு கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இரண்டு வேடங்கள் என்றாலும் சுமார் நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. நிவின்பாலியின் நடிப்பிற்கு பல பக்கங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரை மலையாள சினிமாவில் ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் வினீத் சீனிவாசனின் பாராட்டு மிகவும் ஸ்பெஷல் இல்லையா..?
நான்கு படங்களில் நிவின்பாலியுடன் இணைந்து பணியாற்றியுள்ள வினீத் சீனிவாசன் ''சகாவு' படத்தை பார்த்துவிட்டு இத்தனை வருடங்களில் நிவின்பாலி அடைந்திருக்கும் உயரம் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், ஒரு நண்பனாகவும் தன்னை மகிழ்ச்சி அடையவைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். சகாவு படத்தில் நிவின்பாலியின் கிருஷ்ணன் கேரக்டர், தான் பார்த்து, கேட்டு, படித்து வளர்ந்த பல கம்யூனிஸ்ட் தலைவர்களை தனக்கு ஞாபகப்படுத்தியதாகவும் கூறியுள்ள வினீத் சீனிவாசன் இந்தப்படம் இன்னும் சில பழைய ஞாபகங்களையும் கிளறிவிட்டுள்ளது என கூறியுள்ளார்.