Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோரமாவின் பத்து மாத திருமண வாழ்க்கை

17 ஏப், 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
flash-back-on-the-life-history-of--Manorama-is-a

ஆச்சி மனோரமா கடந்த வந்த பாதை எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரியும். அவரது திருமண வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனோராமா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சக நடிகராக அறிமுமானவர் ராமநாதன். நாடக ஏரியாவில் கொஞ்சம் செல்வாக்கோடு இருந்த அவர் மனோரமாவுக்கு சில நாடக வாய்ப்புகளையும் வாங்கிக் கொடுத்தார். தாயுடன் வசித்து வந்த மனோரமா ராமநாதனின் ஆதரவிலும், அன்பிலும் மயங்கி காதலித்தார்.


ராமநாதன் வேறு ஜாதி என்பதால் காதலுக்கு மனோரமாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அம்மாவை மீறி ராமநாதனை திருமணம் செய்து கொண்டார் மனோரமா.


பத்து மாதங்கள்தான் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகுதான் ராமநாதனின் திட்டம் மனோரமாவுக்கு தெரிய வந்தது.


ராமநாதன் தன் நண்பர்களிடம் பள்ளத்தூர் பாப்பாவை (மனோரமா) மடக்கி காட்டுகிறேன் என்று சவால்விட்டு அந்த சவாலை நிறைவேற்ற காதலிப்பது மாதிரி நடித்து திருமணமும் செய்தது தெரியவந்தது. இதனால் மனோராமா அதிர்ச்சி அடைந்தார். இதற்குள் மனோரமா கர்ப்பமாகி ஒரு குழந்தையை (பூபதி) பெற்றார். அந்தக் குழந்தையால் தந்தை உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடன் கூறியதால் அந்தக் குழந்தையை கொல்லவும் முயன்றிருக்கிறார் ராமநாதன். இதனால் நிரந்தரமாக அவரை விட்டுப்பிரிந்தார்.


அதன்பிறகு நாடகம், சினிமா என்று வளர்ந்த மனோராமா பல உயரங்களை எட்டினார். ராமநாதன் கிராமத்திலேயே வாழ்ந்தார். மனோராமா சின்னத்தம்பி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ராமநாதன் இறந்தார். அவரது உடலுக்கு மகன் என்ற வகையில் கொள்ளி வைக்க தன் மகன் பூபதியை அழைத்துச் சென்று இறுதி சடங்கை முடித்து விட்டுத் திரும்பினார். மனோரமா பிறந்த சமூக வழக்கப்படி பூவும் பொட்டும் இல்லாமல் வாழ சமூகத்தவர்கள் வலியுறுத்தியபோது மனோராமா மறுத்துவிட்டார்.


"அவர் மகனாக பூபதி தன் கடமையை செய்தான். என்னை விட்டு எப்போது சென்றாரோ அப்போதே என் கணவர் இறந்து விட்டார்" என்று சொன்னார் மனோராமா. ஒரு மனைவியாக பத்து மாதங்கள் வரை மட்டுமே வாழ்ந்த மனோரமா, தமிழ் நாட்டு மக்களின் ஆச்சியாக கடைசிகாலம் வரை வாழ்ந்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in