'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி தொடங்கி பல படங்களை ஊர் பெயர்களில் இயக்கியவர் பேரரசு. இப்படி தனது ஒவ்வொரு படத்திற்கும் தமிழகத்திலுள்ள பிரபல ஊர்களின் பெயரை டைட்டீலாக வைத்ததால் கோலிவுட்டில் ஊரரசு என்று அழைக்கப்பட்டு வருகிறார் பேரரசு. மேலும், ஆரம்பத்தில் வருடத்திற்கு இரண்டு படம் இயக்கிய பேரரசு, பின்னர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார். ஆனால் தற்போது அவர் எந்த படமும் இயக்கவில்லை.
இந்நிலையில், சிலகாலம் இடைவெளி கொடுத்த பேரரசு, மறுபடியும் படம் இயக்கப்போகிறாராம். தனது வழக்கமான கிராமத்து பாணியில் அடுத்த மாதம் ஒரு படத்தை தொடங்கப்போவதாக சொல்லும் பேரரசு, எனது முந்தைய படங்களைப்போலவே இந்த படமும் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்கும் ஒரு ஊர் பெயரைத்தான் வைக்கப்போகிறேன். அதற்காக மீண்டும் எனது அருவாளை கையில் எடுக்கப்போகிறேன் என்கிறார்