Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் ஒழுக்க மீறல்கள் இல்லை! -டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேச்சு

17 ஏப், 2017 - 09:12 IST
எழுத்தின் அளவு:
there-is-no-adjustment-in-cine-field-says-director-s.r.prabhakaran

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் தயாரித்துள்ள படம் பிச்சுவாகத்தி. ஐய்யப்பன் இயக்கியுள்ள இந்த படத்தில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளி வெங்கட், ரமேஷ்திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத் துள்ள இப்படத்துக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத் தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், அன்பழகன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.




இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில்....அறிமுக இயக்குனர்களை நம்பி தயாரிப்பாளர்கள் வருவது சாதாரண விசய மல்ல. அந்தவகையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இயக்குனர் ஐயப்பனை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன். இந்த பட டைரக்டர் ஐயப்பன் சுந்தர்.சியின் உதவியாளர். அதனால் காமெடியாக படத்தை பண்ணியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் டிரெய்லரைப்பார்த்தால் படம் வேறுமாதிரியாக இருக்கும்போல் தெரிகிறது. நல்ல கதையம்சமுள்ள வீரியமான கதையாக இருக்கும் என நினைக்கிறேன்.


இந்த படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா தமிழ்நாட்டு பெண். தமிழ்ப்படங்களுக்கு கேரளா, ஆந்திராவில் இருந்துதான் நடிகைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவர் தமிழ்ப்பெண். நம்ம தமிழ்ப்பெண்கள் நடிக்க வருவதே கஷ்டம். காரணம், சினிமாவில் ஒழுக்க மீறல்கள் இருக்குமோ என்கிற பயம்தான். ஆனால் இப்போதைய சினிமாவில் அப்படியெல்லாம் இல்லை. தொழில் நேர்த்தியுடன்தான் அனைவரும் வருகிறார்கள். நல்ல நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள். அதனால் ஸ்ரீபிரியங்கா மாதிரி தமிழ் நடிகைகள் துணிந்து சினிமாவுக்கு வரவேண்டும். சினேகா, தன்ஷிகா வரிசையில் ஸ்ரீபிரியங்காவும் ஒரு புகழ் வாய்ந்த நடிகையாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


அடுத்து, பட நாயகன் இனிகோ பிரபாகரன். நான் இயக்கிய சுந்தரபாண்டியன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் இவர்தான். அவருக்குத்தான் நான் கதை பண்ணியிருந்தேன். அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்பில் இருந்தபோது சுசீந்திரனிடம் நான் உதவியாளராக ஒர்க் பண்ணினேன். அப்போது அந்த படத்தில் இனிகோ பிரபாகர் நடித்தபோது அவரிடம் சுந்தரபாண்டியன் கதையைப்பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அவரும் இந்த கதையில் நடிக்க வெறியுடன் இருந்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறாததால் அவரை வைத்து இயக்க முடியவில்லை. அப்போது சசிகுமார் அழைத்ததால் அந்த கதையை அவரிடம் சொல்லி ஓகே செய்தேன். அதனால் இப்போது நடித்துள்ள பிச்சுவாகத்தி படம் இனிகோ பிரபாகருக்கு இன்னொரு சுந்தரபாண்டியனாக இருக்கும் என நம்புகிறேன்.


இந்த வருடத்தின் துவக்கத்தில் வீரய்யன் படத்தோட ஆடியோ விழாவுக்கு போயிருந்தேன். அந்த படத்திலும் இனிகோதான் நாயகன். அந்த வீரய்யன் கையில் இந்த பிச்சுவாகத்தி கிடைச்சிருக்கு. நிச்சயமாக பெரிய வெற்றி அடைவார். இந்த படத்தின் ட்ரெய்லரில் இனிகோவின் கண்ணில் ஒரு வெறி உள்ளது. அது இந்த முறை நான் ஜெயிச்சிருவேன் என்று சொல்வது போல் உள்ளது. இப்போது தான் அவர் சரியாக ஓட ஆரம்பித்துள்ளார் என் நினைக்கிறேன். இந்த படம் இனிகோவுக்கு மிகப்பெரிய ஒரு அடையாளமாக மாறும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in