நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
மக்களால் விரும்பி ரசிக்கப்பட்ட படங்களை மீண்டும் டிஜிட்டல் மெருகூட்டி, ஒலிப்பதிவில் மேம்பாடு செய்து 35 எம்எம் படங்களை சினிமாஸ்கோப் வடிவத்திற்கு மாற்றி வெளியிடுப்படுவது அதிகரித்துள்ளது. கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன். ஒளிவிளக்கு, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் மீண்டும் வெற்றி பெறவும் செய்தது. கடைசியாக ரஜினி நடித்த பாட்ஷா படம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கமல் நடித்த வெற்றி விழா மற்றும் மீண்டும் கோகிலா படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. வெற்றிவிழா படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கமலுடன் பிரபு, அமலா, குஷ்பு, சசிகலா, சாலிம் கவுஸ் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1989ம் ஆண்டு வெளிவந்த படம்.
மீண்டும் கோகிலா படம் 1981ம் ஆண்டு வெளிவந்தது. ஜி.என்.ரங்கராஜன் இயக்கி இருந்தார். கமல், ஸ்ரீதேவி, தீபா நடித்திருந்தார்கள். என்.கே.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இரண்டு படங்களையுமே டிராவின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.