ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில்தான் தலைப்பு பிரச்சினை அடிக்கடி வரும் தற்போது கன்னடத்திலும் அது ஆரம்பித்துள்ளது. தருண் சிவப்பா தயாரிப்பில் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு லீடர் என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்புக்கு இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.எம்.ஆர் ரமேஷ் குப்பி, காதலர் குடியிறுப்பு, வனயுத்தம், ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்களை தமிழ், கன்னடத்தில் இயக்கியவர்.
"2010ம் ஆண்டே நான் லீடர் என்ற தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளேன். அதனை ஆண்டுதோறும் புதுப்பித்து வருகிறேன். அந்த தலைப்பை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது" என்று வர்த்தக சபையில் புகார் அளித்தார். கர்நாடக திரைப்பட வர்த்தக சவை ரமேசின் கோரிக்கை ஏற்று சிவராஜ்குமார் படத்தின் தலைப்பை மாற்றுமாறு கூறியது.
இதைத் தொடர்ந்து சிவராஜ்குமார் படத்தின் தலைப்பு மாஸ் லீடர் என்று மாற்றப்பட்டது. ஆனால் இதற்கும் ஏ.எம்.ஆர் ரமேஷ் ஒத்துக் கொள்ளவில்லை. லீடர் தலைப்பின் முன்பும் பின்பும் எந்த வார்த்தையும் சேர்க்க கூடாது என்று கூறிவந்தார். இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் "சிவராஜ்குமார் என் மரியாதைக்குரிய கலைஞர் அவருக்காக நான் விட்டுத்தருகிறேன். அவர்கள் மாஸ் லீடர் என்ற தலைப்பை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் லீடர் என்ற தலைப்பை நான்தான் பயன்படுத்துவேன். தலைப்பின் டிசைனும் என்னுடையது, எனவே அதையாவது அவர்கள் மாற்ற வேண்டும். மாற்றாவிட்டால் நீதிமன்றம் செல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை" என்று எழுதியிருக்கிறார்.