பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து “ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல், சித்திரையில் ஒரு நிலாச்சோறு' ஆகிய படங்களில் நடித்தார். தங்கர்பச்சான் இயக்கத்தில் நாயகியாக நடித்துள்ள 'களவாடிய பொழுதுகள்' படம் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிப் போயுள்ளது.
பிரபல யோகா நிபுணரான பரத் தாகூரைக் காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்குத் தாயான பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஹிந்தியில் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது தமிழ், தெலுங்கில் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இது பற்றிய தன் விருப்பத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வருகிறாராம். அவருக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால்தான் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கும் முடிவை அவர் எடுத்துள்ளார் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
பூமிகாவின் குடும்ப வாழ்க்கை அவர் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பே அவர் கணவரை விவகாரத்து செய்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றி விவரங்களை அவர் வெளிப்படையாகச் சொல்வதில்லை.