Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்

15 ஏப், 2017 - 18:13 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-in-Escape-artist-madans-production

வரிசையாக புதிய படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். பாண்டிராஜ் தயாரிப்பில், வள்ளிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள செம, சரத்குமார் உடன் இணைந்து நடிக்கும் அடங்காதே, ஈட்டி இயக்குநர் ரவி அரசு இயக்கும் ஐங்கரன், பாலாவின் நாச்சியார், சர்வம் தல மயம்,4ஜி என பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.


இந்தப் படங்களுடன், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். குப்பத்து ராஜா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இவரோடு பார்த்திபன், பாலக், பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.


இந்தப்படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். சரவணன் இருக்க பயமேன் படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் இது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சரவணன் இருக்க பயமேன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாகியுள்ளார் எழில்.


அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். தற்போது இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in