பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
நயன்தாரா நடிப்பில் 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்த படம் 'மாயா'. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். 'மாயா' படம் யாருமே எதிர்பாராத வகையில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. பொதுவாகவே அறிமுக இயக்குநரின் முதல் படம் வெற்றியடைந்தால், முதல் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இரண்டாவது படத்தையும் தயாரிக்க முன்வருவார்கள். ஆனால் மாயா படத்தை தயாரித்த பட நிறுவனம் மிக குறைவான சம்பளத்துக்கு அடுத்த படத்தை இயக்கும்படி கேட்டது.
அதற்கு மாயா பட இயக்குநர் அஸ்வின் சரவணன் மறுத்துவிட்டார். அதோடு, தனது இரண்டாவது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருந்து வந்தார் அஸ்வின் சரவணன். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போது தனது இரண்டாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்! தனது இரண்டாவது படத்திற்கு வித்தியாசமாக 'இறவாக்காலம்' என்று டைட்டில் வைத்துள்ளார் அஸ்வின் சரவணன்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா காபி முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 'மாயா' படத்திற்கு இசை அமைத்த ரான் எதன் யோஹான் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு துவங்கி விட்ட இந்த படத்தை டி.எஸ்.எல். நிறுவனம் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார்.
என்.முரளி ராமசாமி என்றதும் ராமநாராயணனின் மகனோ என்ற சந்தேகம் படத்துறையில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டது. இந்தப் படத்துக்கும் தேனாண்டாள் முரளி ராமசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம். அவர் வேறு இவர் வேறு.