இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
கடந்த 2015ல் இரண்டு படங்களை கொடுத்த, தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜ் ரவிதேஜாவுக்கு கடந்த வருடம் படம் எதுவும் ரிலீசாகவில்லை. ஆனால், அதை ஈடுகட்டும் விதமாக தற்போது 'ராஜா தி கிரேட்' மற்றும் 'டச் சேசி சூடு' என ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் 'டச் சேசி சூடு' படத்தில் மீண்டும் காக்கி யூனிபார்ம் அணிந்துள்ளார் ரவிதேஜா.. ஆம் இந்தப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரவிதேஜா..
ஏற்கனவே விக்ரமார்குடு, பவர் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் ரவி தேஜா. அந்தவகையில் தற்போது அதிரடி போலீஸ் படமாக இதை உருவாகி வருகிறார் அறிமுக இயக்குனர் விக்ரம் ஸ்ரீகொண்டா. இதில் நீதியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிகை ரஷி கன்னா நடிக்கிறார். பாண்டிச்சேரியில் இதன் படப்படிப்பு நடைபெற்று வருகிறது.