ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
கடந்த மாதம் மலையாளத்தில் 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது. லிஜோஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின் உட்பட 85 கதாபாத்திரங்களில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்தனர்.. அதில் கதாநாயகிகளில் ஒருவராக லிச்சி என்கிற கேரக்டரில் நடித்த அன்னா ரேஷ்மா ராஜன் தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தார்..
இன்னொருபக்கம் அந்தப்படத்தில் பன்றி இறைச்சி வியாபாரம் செய்பவராக யதார்த்த வில்லனாக மிரட்டியிருந்தார் புதுமுகம் சரத்குமார் என்பவர்.. இப்போது இந்த இருவருக்கும் ஜாக்பாட் பரிசு கிடைத்தது போல மோகன்லால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. மோகன்லாலை வைத்து முதன்முறையாக லால்ஜோஸ் ஒரு படம் இயக்கவுள்ளார்.. இந்தப்படத்தில் தான் இவர்கள் இருவரும் நடிக்க இருக்கிறார்கள். மோகன்லால் தற்போது நடித்துவரும் 'வில்லன்' படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.