ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு நடிகை சோனம் கபூர். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான நீர்ஜா படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சோனம் கபூருக்கும் தேர்வுக்குழுவின் சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அனில் கபூர்.
இதுகுறித்து அனில் கபூர் கூறியிருப்பதாவது... ‛‛நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பத்தாரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மிகவும் குறுகிய காலத்தில், குறைந்த படங்களில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் நம் நாட்டின் உயரிய தேசிய விருது கிடைத்துள்ளது. நீர்ஜா படத்தை அனைவரும் விரும்பினார்கள். நீர்ஜா படத்திற்கு மட்டுமல்ல சோனம் கபூருக்கும் தேசிய விருது கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன். ஜனாதிபதி கையால் சோனம் கபூர் தேசிய விருது வாங்கும் நாளான மே 3-ம் தேதியை எண்ணி ஆவலோடு இருக்கிறேன்'' என்கிறார்.