அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கபீர்கான் - சல்மான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் ‛டியூப்லைட்'. சல்மான் உடன் சீனாவை சேர்ந்த நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். இப்படம் எல்லை பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகமாலே இருக்கிறது. டியூப்லைட் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று கபீர்கான் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஏப்ரல் மாத கடைசியில் டியூப்லைட் படத்தின் டீசரை முதலில் வெளியிட உள்ளோம். அதனைத்தொடர்ந்து மே மாதம் டிரைலர் வெளியாகும். டிரைலர் ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறீர்கள் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதற்கான காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும். படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்டால் படத்தின் வியாபாரம் மற்றும் படத்தின் மீதான புரொமோஷன் உள்ளிட்டவைகளுக்கு உதவும்'' என்று கூறியுள்ளார்.