மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
தனுஷ் இயக்கித்தில் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, சாயா சிங் மற்றும் பலர் நடித்துள்ள ப. பாண்டி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நடிப்பில் மட்டுமல்லாது இயக்கத்திலும் தனுஷை பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ராஜ்கிரண், தனுஷ், பிரசன்னா, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ப. பாண்டி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அவருடைய நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஆகியோர் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். இந்தப் படத்தின் பெருமையை கெடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தனுஷ் படங்கள் இயக்காமல் இருப்பது நல்லது என ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். அதோடு தானே இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை வாங்கி நடிக்க முடிவு செய்துள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதுஒருபுறம் இருக்க, ஹிந்தியில் ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். ப. பாண்டி ஹிந்தி ரீமேக்கை தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. தனுஷின் அறிமுக இயக்கமான ப.பாண்டி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு தனுஷ் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் பாராட்டி வருகின்றனர்.