ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கொடி படத்திற்கு பிறகு சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை, 96 என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் திரிஷா. இதில் சதுரங்கவேட்டை -2, கர்ஜனை படங்களில் ஆக்சன் வேடங்களில் நடித்து வரும் திரிஷா, மாதேஷ் இயக்கத்தில் நடித்துள்ள மோகினி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரண்மனை-2, நாயகி படங்களைத் தொடர்ந்து இந்த படமும் ஹாரர் கதையில் தயாராகியிருக்கிறது.
கதைப்படி சமையல்கலை வல்லுனரான திரிஷா, வெளிநாட்டுக்கு சமையல் ஸ்பெசலிஸ்டாக செல்கிறார். அங்கே போன இடத்தில் இன்னொரு திரிஷாவை சந்திக்கிறார். அவர் யார்? அவரை எந்தமாதிரியான தோற்றத்தில் இந்தியாவில் இருந்து சென்ற திரிஷா சந்தித்தார். அதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மோகினி படத்தின் கதையாம். அந்த வகையில், இந்த மோகினி படம் வழக்கமான ஹாரர் படங்களைப்போன்று மிரட்டலான படமாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியிருக்கிறது.